ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட 2010 காலண்டர்!

ஏ.ஆர்.ரகுமான் பௌண்டேஷன் தனது கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி எனு் இசைப் பள்ளியில் தற்போது சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 30 மாணவ,மாணவிகளுக்கு இலவச இசைப் பயிற்சி அளிக்கிறது.
30 மாணவர்களுக்கும், உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோல் இன்னும் பல மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரகுமான் பௌண்டேஷன் திட்டமிட்டுள்ளது.
இதற்கான நிதியை இந்த 2010 நாள்காட்டியின் விற்பனை மூலம் பெறவுள்ளது. இந்த நாள்காட்டியை திரைப்படம் மற்றும் பொழுது போக்குத்துறையின் முன்னணி புகைப்பட கலைஞரும், ஆடியோ-மீடியா எஜீகேஷன், வேர்ல்ட் லைட் நிறுவனங்களில் முதன்மை அதிகாரியான செல்வகுமார் வடிவமைத்துள்ளார்.
நாள்காட்டியில், புகழ்பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகளுடன், "பெறும் தருணத்தைவிட கொடுக்கும் தருணமே சிறந்தது", "குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவதைவிட சிறந்த முதலீடு ஏதுவும் இல்லை" போன்ற ஏ.ஆர்.ரகுமானின் சிந்தனை மொழிகளும் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











