அர்ச்சனா-ரிஷியின் 'தமிழகம்'!

சீக்கிரம் எல்லோரது கவனத்தையும் கவர வேண்டுமென்றால் ஏதாவது வித்தியாசமாகச் செய்தாக வேண்டுமே. சிண்டைப் பிய்த்துக் கொண்டு யோசித்ததில் புது இயக்குநர் சுரேஷ்குமாருக்குக் கிடைத்த யோசனைதான் இந்த அனைத்துக் கட்சி டைட்டில்.
ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் என்கிற ரிஷி நாயகனாக நடிக்க, வேகம் படத்தில் நடித்த அர்ச்சனா நாயகியாக நடிக்கிறார்.
மாதா மூவீஸ் சார்பில் ஏ.ஜி.அருள், பி.சந்திரசேகரன் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் ஏவிஎம்மில் நடந்தது. இயக்குநர் பாக்யராஜ் பாடல்களை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். மக்கள் தொடர்பாளர் பெரு துளசி பழனிவேல் அனைவரையும் வரவேற்றார்.
முன்னதாக மூன்று பாடல்களைத் திரையிட்டுக் காட்டினார்கள்.
வருது வருது அரபுக் குதிரை..., என்னை வச்சிக்கடா, இல்ல கட்டிக்கடா... போன்ற 'கருத்தாழமிக்க' பாடல்களை முறையே பா.விஜய்யும், கவிஞர் சினேகனும் எழுதியிருந்தார்கள். ஆஸிப் அலி இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications