சிரஞ்சீவியின் நண்பர் நடிகர் ஹரிபிரசாத் மரணம்

By Staff

Chiranjeevi
ஹைதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டாரும், அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளவருமான சிரஞ்சீவியின் மிக நெருங்கிய நண்பரான ஹரிபிரசாத், டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சிரஞ்சீவியின் மிக நெருங்கிய நண்பர் ஹரி பிரசாத் (55). சிரஞ்சீவி சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் படிப்பை மேற்கொண்டிருந்தபோது அவரது வகுப்புத் தோழராக இருந்தவர் ஹரிபிரசாத். சிரஞ்சீவி நடித்துள்ள சில படங்களையும் இவர் தயாரித்துள்ளார். இவர் ஒரு நடிகரும் கூட. 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு ரோல்களில் நடித்துள்ளார்.

நேற்று இரவு ஹரி பிரசாத், டிவி 9 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். சிரஞ்சீவியின் புதிய அரசியல் கட்சி குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரி பிரசாத் உயிரிழந்தார்.

ஹரிபிரசாத் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சிரஞ்சீவி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலைப் பார்த்து கண் கலங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X