For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோகினி கிளைமாக்ஸ் மாற்றம்!

    By Staff
    |

    Nayanthara and Danush
    'யாரடி நீ மோகினி' படத்தின் கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால் படத்தின் கிளைமாக்ஸை மாற்ற உத்தரவிட்டுள்ளாராம் தனுஷின் தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா.

    செல்வராகவனின் உதவியாளரான ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நயனதாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் யாரடி நீ மோகினி. படம் குறித்து பொதுவாக பாசிட்டிவான பேச்சு நிலவுகிறது. இருப்பினும் கிளைமாக்ஸ் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுதந்துள்ளன.

    இதையடுத்து கிளைமாக்ஸை மாற்றுமாறு ஜவஹரை கஸ்தூரி ராஜா கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தெலுங்கில் இதே கிளைமாக்ஸை வைத்தவரான இயக்குநர் செல்வராகவனிடம் ஆலோசனை செய்துள்ளார் ஜவஹர். இதையடுத்து அவரது ஆலோசனைப்படி கிளைமாக்ஸை அவர் மாற்றியுள்ளதாக தெரிகிறது.

    செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய அடவரி மடலுக்கு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழிலும் சூப்பர் ஹிட் ரேஞ்சை எட்டிக் கொண்டிருக்கிறது.

    இருப்பினும் கிளைமாக்ஸில் நயனதாரவும், தனுஷும் கல்யாணம் செய்து கொள்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனராம். இதையடுத்தே கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று கஸ்தூரி ராஜா விரும்பினாராம்.

    தற்போது சில காட்சிகளை எடிட் செய்து, புதிதாக சில காட்சிகளை சேர்த்து, நயனதாராவின் பெற்றோர் விருப்பப்படி அவரை தனுஷ் மணப்பது போல காட்சியை மாற்றியுள்ளனராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X