சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை!

By Staff

CM Karunanidhi blesses Soundarya Rajini Ashwin Kumar
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் குமாரின் நிச்சயதார்த்தம் நேற்று மாலை சென்னையில் நடந்தது.

அடையாறு பார்க் ஷெரட்டான் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் வந்திருந்து வாழ்த்தினார். மணமக்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மருமகள் துர்கா ஸ்டாலின் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்துவிட்ட கமல், இறுதிவரை ரஜினியின் உடனிருந்தார்.

மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் வந்தார் அஜீத்குமார். சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

அனைவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா ரஜினி, தொழிலதிபர் ராம்குமார், திருமதி ராம்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

ஜெயலலிதா வரவில்லை:

ரஜினி நேரில் போய் அழைத்தும், இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரவில்லை.

இன்று கருணாநிதியுடன் ரஜினி திடீர் சந்திப்பு:

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை ரஜினி திடீரென சந்தித்துப் பேசினார்.

சந்திப்பின்போது ரஜினி, தன் மகளின் திருமண நிச்சயதார்த்ததிற்கு குடும்பத்தினருடன் நேரில் வந்து வாழ்த்திய கருணாநிதிக்கு அவர் நன்றி தெரிவித்ததாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X