தெலுங்கில் தீபிகா குத்தாட்டம்

பாலிவுட் நாயகிகள் யாரும் அவ்வளவு சீக்கிரம் தென்னகத் திரைப்பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அதிலும் உச்சத்தில் இருக்கும் பாலிவுட் நடிகைகளை பிடித்து கொண்டு வந்து நடிக்க வைப்பது என்பது ரொம்ப கஷ்டமான வேலை.
ஆனால் தீபிகா படுகோனை ஒரே ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளார் ஒரு தெலுங்குப் பட இயக்குநர்.
ஐஸ்வர்யா ராய், பிபாஷா பாசு, லிசா ரே, ப்ரீத்தி ஜிந்தா, அஞ்சலா ஜவேரி ஆகியோரை தெலுங்கில் நடிக்க வைத்தவர் இயக்குநர் ஜெயந்த் பரஞ்சே.
இவர் தற்போது லவ் 4 எவர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனின் ஐட்டம் பாடல் இடம் பெற்றுள்ளதாம். இதற்கான ஷூட்டிங்கை சமீபத்தில்தான் நடத்தி முடித்துள்ளனராம்.
தெலுங்குப் படம் ஒன்றில் தீபிகா நடிப்பது இதுவே முதல் முறை. அதிலும் குத்தாட்டத்திற்கு அவர் ஆடியுள்ளதால் படம் சூப்பர் ஹிட்டாகி விடும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜெயந்த்.
படப்பிடிப்பில் தீபிகா கொடுத்த ஒத்துழைப்பால் குஷியான ஜெயந்த், இப்போது தீபிகாவை வைத்து ஒரு இந்திப் படத்தை இயக்கும் முடிவுக்கு வந்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











