ஜக்குபாயில் கவுண்டமணி!

பொங்கலுக்கு வெளியாகி ஒரளவு லாபமும் சம்பாதித்துக் கொடுத்த தங்கம் படத்துக்குப் பின் கவுண்டமணியின் காமெடிக்கு ஏக மவுசு. காரணம் அந்தப் படம் ஓடியதே அவரது காமெடிக்காகத்தான்.
அதன்பிறகு வந்த 20க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறிவிட்ட கவுண்டமணி, இப்போது தேரந்தெடுத்து 6 படங்களை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார். குசேலன் வாய்ப்பையே வேண்டாம் என்று கூறி அதிர வைத்தவர் கவுண்டமணி.
ஆனால் சரத்குமார் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஜக்குபாயில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர ராஜ்கிரணுடன் இரு படங்கள், சத்யராஜூடன் இரு படங்களில் நடிக்கிறார்.
ரவிக்குமாருடன் கவுண்டமணி இணைந்த நாட்டாமை, சமுத்திரம், சேரன் பாண்டியன் போன்றவை வசூலில் பெரும் சாதனைப் படைத்தன.
ஜக்குபாயில் கிட்டத்தட்ட சரத்துக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் மணி. இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் செந்திலையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ரவிக்குமார்.


Click it and Unblock the Notifications











