கவுதம் மேனன் டெக்னிக் எடுபடுமா?

இந்த தலைப்பில் அவர் படமெடுக்கிறார் என்று தகவல் வெளியானதிலிருந்தே பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை படத்தை. அதற்கேற்ப சமீரா ரெட்டி தவிர பெரிய நடிகைகள் யாரும் இந்தப் படத்தில் இல்லை.
படத்தை எடுத்து முடித்த கவுதம் மேனன், கடைவிரித்தேன், கொள்வாரில்லை என்ற நிலையில் இருந்தார். அப்போதுதான் அதிரடி விளம்பர உத்தியை ஆரம்பித்தார்.
பாரதிராஜாவுடன் பேட்டி என்று ஒரு நாள் செய்தி, படத்துக்கு சூப்பர் ஓபனிங் என்றொரு நாள் செய்தி, நாளிதழ் நிருபர்களுக்கு மட்டும் தனியாக ஒரு பிரஸ் மீட், முதல்நாளே படத்துக்கு டிக்கெட் கிடைக்கலே என்று ஒரு பில்ட் அப் என தொடர்ந்து செய்திகளை உருவாக்கினார்கள்.
இந்த டெக்னிக் எந்த அளவுக்கு எடுபடும் என்பது இனிமேல்தான் தெரியவரும். அதே நேரம் படத்தில் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு வன்முறையும் வக்கிரமும் நிறைந்திருப்பதாக இப்போதே தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக, வளர்ப்புத் தாயுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளதாம். ஒருவேளை, இதை எதிர்த்து யாராவது ஆர்ப்பாட்டம் செய்வார்கள்... அதையும் விளம்பர யுத்தியாக்கிக் கொள்ளலாம் என்ற ஐடியா ஏதேனும் இருக்கிறதோ!


Click it and Unblock the Notifications











