சிபிஐ நீதிமன்றத்தில் கெளதமி-அர்ஜுன்

By Staff

Gowthami, Shruthi Subbulakshmi and Akshara
சினிமா தயாரிக்க கடன் வாங்கிவிட்டு, மீண்டும் திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகை கெளதமி மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

வடிவாம்பிகை என்பவர் 'அக்னி வளையம்' என்ற பெயரில் நடிகர் அர்ஜூன், நடிகை கௌதமி ஆகியோரை வைத்து படம் தயாரிப்பதாகக் கூறி இந்தியன் வங்கியில் முன்பு கடன் பெற்றார்.

ஆனால் அறிவித்தபடி படம் தயாரிக்கப்படவில்லை. வங்கியில் பெற்ற பணத்தையும் திரும்பச் செலுத்தவில்லை.

பலமுறை கேட்டும் உகிய பதில் இல்லாததால், இந்தியன் வங்கியினர் சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

படத்தின் நாயகன்-நாயகியான அர்ஜுன்-கெளதமி ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இருவரையும் இன்று விசாரணைக்கு வருமாரு நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார்.

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கெளதமி, அர்ஜுன் இருவருமே ஆஜராகினர்.

அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்கள் நீதிபதியிடம் 'தாங்கள் இந்த படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தரவில்லை, எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை, பணமும் பெறவில்லை என்று கூறினர்.

விசாரணை தொடர்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X