twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலை மத்திய அரசு கெளரவிக்கும்!-சோனி

    By Staff
    |

    Ambika Soni
    சென்னை: இஃபி (IFFI) விழா அமைப்பாளர்கள் பதில் கமல்ஹாஸனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது எனக்குப் புரிகிறது. கமல் போன்ற ஒரு சாதனையாளரின் பெருமையை 3 படங்களில் மட்டும் சொல்லிவிட முடியாது. எனவே டெல்லியில் மத்திய அரசு ஆதரவில் நடக்கும் திரைப்பட விழாவில் அவரது படங்கள் தனியாக திரையிட்டுக் காட்டப்படும், என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அம்பிகா சோனி இன்று தெரிவித்தார்.

    சென்னையில் நடக்கும் நசிகர் கமல்ஹாஸன் தலைமையில் நடக்கும் FICCI அமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டில் பேசும்போது அம்பிகா சோனி இதைத் தெரிவித்தார்.

    இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "கலைக்கு வடக்கு தெற்கு பேதமில்லை. எந்த மாநிலத்தவராக இருந்தாலும் அவர்கள் இந்தியக் கலைஞர்கள்தான். இந்தியக் கலைஞர் பிரகாஷ் ராஜுக்குதான் சிறந்த நடிகர் விருது கொடுத்துள்ளோம். அவர் தமிழ்க் கலைஞரா வட இந்தியரா என்று பார்க்கவில்லை.

    கமல்ஹாஸன் மிகப்பெரிய திரைக் கலைஞர். மேதை. அவரைப் போன்ற கலைஞர்களால் இந்தியத் திரையுலகுக்குப் பெருமை.

    இன்று பத்திரிகைகளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் மூலம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவரது படங்கள் திரையிடப்படாததும், அதன் அமைப்பாளர்கள் பதிலால் கமல் அடைந்துள்ள அதிருப்தியும் எனக்குப் புரிகிறது.

    நிச்சயம் அவரது சாதனைகளை விளக்க 3 படங்கள் போதாதுதான்.

    கமல்ஹாஸனை இந்திய அரசு உரிய முறையில் கவுரவிக்கும். அவரது பொன்விழா சாதனைகளைப் பாராட்டி, இந்திய அரசும் திரைப்பட விருது விழா இயக்ககமும் இணைந்து நடத்தும் சிறப்பு திரை விழாவில் கமல் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு அவர் கவுரவிக்கப்படுவார்" என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X