வாரணம் ஆயிரம் - டிரிம் செய்த கெளதம் மேனன்

சூர்யா - மீரா இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வாரணம் ஆயிரம். படம் நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகம் என ரசிகர்கள் குறைபட்டனர். பத்திரிகைகளிலும் அதே போன்ற விமர்சனங்கள் வந்த வண்ணமுள்ளன.
இதுகுறித்து இயக்குநர் கௌதம் மேனனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், திரையரங்குகளிலும் ரசிகர் வருகை குறையவே உடனடியாக படத்தின் பல காட்சிகளை வெட்டி இப்போது இரண்டரை மணிநேரப் படமாக மாற்றியுள்ளார் கௌதம்.
குறிப்பாக டெல்லியில் குழந்தையை சூர்யா காப்பாற்றுவது போன்ற காட்சிகள் முழுவதுமாக வெட்டப்பட்டுள்ளனவாம். போதை மருந்துக்கு சூர்யா அடிமையாகும் காட்சிகளிலும் சிலவற்றை வெட்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.
Comments


Click it and Unblock the Notifications