twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோவா, ஜீரோவா? - குறும்படம் ரிலீஸ்

    By Staff
    |

    Surya
    நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, கல்வி விழிப்புணர்வு குறும்படம் ஹீரோவா, ஜீரோவா வெளியிடப்பட்டது.

    இந்த படத்தில் சூர்யா, விஜய், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரியா இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நா.முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். கே.வி.ஆனந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்தார். கலை இயக்கத்தைக் கவனித்தவர் ராஜேந்திரன்.

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன்படி இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் குழந்தை கல்வி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் கல்வி, பள்ளி இடை நிற்றலை முழுவதுமாக நிறுத்துவது, குழந்தை கல்வி குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    'படித்தவர்கள்தான் நிஜ ஹீரோ. இப்போ சொல்லுங்க, நீங்க ஹீரோவா? ஜீரோவா?' என்று குழந்தைகளிடம் கேட்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் ஒரு பைசா கூட வாங்காமல் சேவை நோக்குடன் நடித்துக் கொடுத்துள்ளனர்.

    இந்த படத்தை நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இணைந்து நேற்று வெளியிட்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரம் அறக்கட்டளையின் ஒவ்வொரு முயற்சியும் சேவை மனப்பான்மை மட்டுமில்லாமல் சமுதாய முன்னேற்றத்துக்காவும் எடுக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையிலும் நாம் இன்னும் 100 சதவீத கல்வியை எட்டமுடியாத நிலையில் இருக்கிறோம் என்பது அவமானமாகும் என்று கூறினார்

    அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், இந்த குறும்படம் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் திரையிடப்படும். இதை பார்த்து மக்கள் நிச்சயம் விழிப்பு பெறுவார்கள் என்று கூறினார்.

    படப்பிடிப்பில் இருந்த மாதவன் இந்த விழாவுக்காக வந்திருந்தார். குறைச்சலாக பேசி விட்டு சென்றார்.

    இயக்குநர் மணிரத்தினம், ரோஷினி, தாமஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X