எக்கோ நிறுவனம் மீது போலீஸில் இளையராஜா புகார்!

அதாவது விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏதுமில்லாத காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். இன்று இசைத்தட்டு வடிவத்தைத் தாண்டி, சிடி, சிப், இன்டர்நெட், எஃப்எம், ரிங்டோன்ஸ் என பல பரிமாணங்களில் பணம் பார்க்கிறார்கள் அந்த இசையை வைத்து.
இன்று வெறும் 10 ரூபாய்க்கு ஒரு எம்பி 3 சிடி கிடைக்கிறது. ஆனால் இசைஞானியின் அந்த பொற்காலப் பாடல்கள் அடங்கிய சிடிக்கு எக்கோ நிறுவனம் வைத்திருக்கும் விலை ரூ 200. அதுவும் 16 பாடல்கள்தான்!
ஆனால் இதில் இளையராஜாவுக்கு நயா பைசா ராயல்டி கிடையாதாம். கண்ணெதிரே தனது இசையை வைத்து மாபெரும் கொள்ளை நடப்பதைப் பார்த்துப் பொறுக்காத ராஜா, தனது இசைக்கான காப்பிரைட் உரிமையை மொத்தமாக மலேஷிய நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் எக்கோகாரர்கள் பிடிவாதமாக ராஜாவின் பழைய பாடல்களை சிடி அடித்து விற்று வருகிறார்கள். இதனால் கோபமடைந்த இளையராஜா, சட்டத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, எக்கோ நிறுவனம் மீது புகார் தர முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து எக்கோ நிறுவனம் மீது எழுத்து மூலம் புகார் அளித்துள்ளார்.
எக்கோ நிறுவனத்தின் உரிமையாளர் அமெரிக்காவில் வசிப்பவர். பெயர் பார்த்தசாரதி. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளிடமும் உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை.


Click it and Unblock the Notifications











