கஜோல் மீண்டும் கர்ப்பம்?

இந்த செய்தி குறித்து அவரது கணவரும், நடிகருமான அஜய் தேவ்கனிடம் செய்தியாளர்கள் கேட்டால் அவர் மறுக்கவும் இல்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. கடவுள் கொடுத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா என்று மட்டும் புன்னகையுடன் எதிர் கேள்வி போடுகிறார்.
கஜோல் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதால் தேவ்கன் குடும்பத்தினரும், கஜோல் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.
ஏற்கனவே அஜய் தேவ்கன்- கஜோல் தம்பதிக்கு நியாசா என்ற மகள் உள்ளார். கரண் ஜோகரின் வற்புறுத்தல் காரணமாக மை நேம் இஸ் கான் படத்தில் நியாசாவை நடிக்க வைத்தார் கஜோல்.
தற்போது ஸ்டெப்மாம் படத்தின் இந்திப் பதிப்பில் நடித்து வருகிறார் கஜோல். அதன் டாக்கி போர்ஷனை முடித்து விட்டனராம். இதில் கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கஜோல் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகமாக எடுத்து முடித்து விட்டனராம். இதை வைத்துத்தான் கஜோல் கர்ப்பமாக இருப்பதை பாலிவுட்டினர் உறுதி செய்துள்ளனர்.
இந்தப் படம் தவிர அஜய் தேவ்கனுடன் இணைந்து தூன்பூர் கா சூப்பர்ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார் கஜோல். இதன் படப்பிடிப்பும் கூட கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாம்.


Click it and Unblock the Notifications











