'ஜாக்பாட்' - அடுத்தது யார்?

குஷ்பு, திமுகவின் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றபோது கூட ஜாக்பாட் நிகழ்ச்சியை ஜெயா டிவி நிறுத்தவில்லை.
அதற்குக் காரணம், குஷ்பு மீது ஜெயலலிதாவுக்கு இருந்த சாப்ட் கார்னர்தான் காரணம் என்கிறார்கள் ஜெயா டிவி நிறுவனத் தரப்பில். ஆனால் ஜெயலலிதாவை மதிக்காமல், அவர் காட்டிய பரிவைக் கூட கண்டுகொள்ளாமல் குஷ்பு, திமுகவில் சேர்ந்ததால் ஜெயா டிவி நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்ததாம்.
இதனால்தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தபோதிலும் ஜாக்பாட் நிகழ்ச்சியை நிறுத்தி வைக்கும் அளவுக்கு போய் விட்டதாம் ஜெயா டிவி.
தற்போது புத்தம் புதுப் பொலிவுடன், இன்னொரு பிரபல நடிகையை வைத்து ஜாக்பாட் நிகழ்ச்சியை வேறு விதமாக நடத்த திட்டமிட்டு வருகிறதாம் ஜெயா டிவி.
இதற்கான நடிகையைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனராம். குஷ்புவை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய நடிகை ஒருவரை பிடித்துப் போட தீவிரமாக உள்ளனராம்.
ஜாக்பாட் நிகழ்ச்சியை விட அதில் குஷ்பு போட்டு வரும் ஜாக்கெட்களும், அதன் டிசைன்களும்தான் ரொம்பப் பிரபலம் என்பது உதிரித் தகவல்.


Click it and Unblock the Notifications











