சக்கரகட்டி... பாக்யராஜ் சந்தோஷம்!

ஹீரோயின்களாக வேதிகா, மும்பையைச் சேர்ந்த இஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. விரைவில் பாடல்கள் வெளியாக உள்ளன.
இப்படத்தின் முதல் காட்சியை இயக்குநர் பாக்யராஜுக்கு போட்டுக் காட்டினாராம் தயாரிப்பாளர் தாணு. பார்த்து முடித்த பாக்யராஜ், படத்தின் இயக்குநரான கலாபிரபுவை வெகுவாகப் பாராட்டினாராம்.
"இந்தப் படத்தை பார்க்க வரும் முன் என் மகன் கதாநாயகனாக நடிச்ச படத்தைப் பார்க்க போறோம் என்ற நினைப்போட வந்தேன். ஆனா படத்தைப் பார்த்த பிறகு உங்க பையனோட படத்தைப் பார்த்த திருப்தியோட போறேன்.
அவ்வளவு சிறப்பா பண்ணியிருக்காரு உங்க மகன் கலாபிரபு இந்தப் படத்தை. வாழ்த்துக்கள்..." என்று வாய்விட்டுப் பாராட்டினாராம் பாக்யராஜ்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, தாணுவின் தயாரிப்பு என பிரமாண்டங்களுக்குப் பஞ்சமில்லாத சக்கரகட்டி கோடை விருந்தாக திரைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











