மலையாளத்தில் ரீமேக் ஆகும் காக்கிச்சட்டை

கமல்ஹாசன் ரசிகர்களுக்குக் குஷியைக் கொடுத்த படம் காக்கிச் சட்டை. செமத்தியான மசாலா தடவப்பட்ட, அதிரடி ஆக்ஷன் படமான இது, பாடல்களுக்காகவும், கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோரின் நடிப்புக்காகவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்திற்குப் பிறகுதான் சத்யராஜ் பெரிய வில்லனாக புகழ் பெற்றார்.
இந்தப் படம் தற்போது ரீமேக் ஆகிறது. ஆனால் தமிழில் அல்ல, மலையாளத்தில். மலையாளத்துக்காரர்கள் பெரும்பாலும் பிற மொழிப் படங்களை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இருந்தாலும் அவ்வப்போது அவர்களும் பிற மொழிப் படங்களை ரீமேக்குவது உண்டு.
அந்த வகையில் காக்கிச் சட்டையை அவர்கள் கையில் எடுக்கின்றனர். 1985ல் வெளியான காக்கிச் சட்டையை இயக்குநர் பிரமோத் பப்பன் ரீமேக் செய்யவுள்ளார். கமல்ஹாசன் நடித்த பாத்திரத்தில் பிருத்விராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. வில்லனாக நடிக்கப் போவது யார் என்று தெரியவில்லை.
விரைவில் முறைப்படி அறிவுக்கவுள்ளாராம் பப்பன்.


Click it and Unblock the Notifications











