மனித சங்கிலி-கோலிவுட்டும் கைகோர்க்கிறது!

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நாளை ராமேஸ்வரத்தில் பேரணி, மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது. ராமேஸ்வரம் செல்வதற்காக சென்னை எழும்பூரிலிருந்து தனி ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு கிளம்பும் இந்த ரயிலில் 2000 பேர் செல்கின்றனர். இந்த ரயிலை இயக்குனர் கே.பாலசந்தர் கொடியசைத்து வழி அனுப்புகிறார்.
ரயில் நாளை காலை 6 மணிக்கு ராமேஸ்வரம் அடையும். அங்கு திரையுலகினர் தங்குவதற்காக 450 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பகல் 11 மணிக்கு பேரணி நடைபெறும். கீழக்காடு என்ற இடத்தில் 3 மணிக்கு பொதுக் கூட்டம் தொடங்கும்.
மாலையில் சென்னை திரும்புவோம். இந்த போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு முழு அளவில் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை அடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்திலும் திரையுலகினர் அனைவரும் பங்கேற்போம்.
அது அவர்கள் விருப்பம்!:
நடிகர் சங்கம் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருப்பது பற்றி கேட்கிறார்கள். அது அவரவர் உணர்வு, விருப்பம். உணர்வுள்ள அனைவரும் ராமேஸ்வரத்தில் பங்கேற்பார்கள்.
அகதிகள் முகாமுக்கு நான் போனது வரம்பு மீறிய செயல் அல்ல. அங்குள்ள சூழலைத் தெரிந்தி கொள்ளச் சென்றேன், என்றார் பாரதிராஜா.
தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், துணை செயலாளர் அன்பாலயா பிரபாகரன், பொருளா ளர் காஜாமொய்தீன், சென்னை தியேட்டர் அதிபர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், தயாரிப்பாளர்கள் வி.சேகர், ஆனந்தா சுரேஷ், விஜயமுரளி உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











