»   »  விந்தியாவை வாழ்த்திய 'கோலிவுட்'!

விந்தியாவை வாழ்த்திய 'கோலிவுட்'!

Subscribe to Oneindia Tamil
Vindhya with Gopi
நடிகை விந்தியா திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு விந்தியா - கோபி தம்பதியை வாழ்த்தினர்.

கடந்த 16ம் தேதி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபிக்கும், நடிகை விந்தியாவுக்கும் திருமணம் நடந்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யரப்பட்டிருந்தது.

இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, தயாரிப்பாளர்கள் முரளிதரன், சுவாமிநாதன், பிரமிட் நடராஜன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் அர்ஜூன், பிரபு, சத்யராஜ்,

பிரசாந்த், தியாகராஜன், விஜயக்குமார், ஜீவா, சிபிராஜ், நடிகைகள் குஷ்பு, சங்கவி, மனோரமா, விவேக் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு விந்தியா தம்பதியை வாழ்த்தினர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil