மல்லிகா வெடி-லாலு ஆட்டம் பாம்!

கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரது பெயர்களில் வெளியான பட்டாசுகள் நல்ல விற்பனையைச் சந்தித்தன.
மல்லிகா, லாலு பெயர்களில் வெளியான பயர் கிராக்கர்கள் சரமாரியாக விற்றனவாம். அதேபோல நிதீஷ் குமார் ராக்கெட்டுக்கும் ஏக டிமாண்ட்.
இவர்களை விட சோனியா மத்தாப்புக்களுக்குத்தான் இன்னும் நல்ல கிராக்கி. சோனியா காந்தி பெயரில் வெளியானவை இவை.
இந்தப் பெயர்களோடு, பிரபலங்களின் படங்களையும் இணைத்து இந்தப் பட்டாசுகள் விற்பனையாகின.
இவர்கள் தவிர பல்வேறு கவர்ச்சி நடிகைகள், அரசியல் தலைவர்களின் பெயர்களிலும் பட்டாசுகள், மத்தாப்புகள் வெளியாகியிருந்தன.
லாலு ஆட்டம் பாம், பாஸ்வான் புல்லட் பாம் ஆகியவற்றுக்கு இளைஞர்களிடையே செமத்தியான வரவேற்பாம். பூரிப்பாக சொன்னார் பட்டாசு வியாபாரியான முகம்மது நதீம் என்பவர்.
Comments
தீபாவளி பட்டாசு பீகார் மல்லிகா ஷெராவத் ராக்கெட் லாலு பிரசாத் யாதவ் bihar crackers deepavali lalu prasad yadav mallika sherwat rockets


Click it and Unblock the Notifications