ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்க, மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ரஞ்சிதா தொடர்பான காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றாலும், அவர் டப்பிங் பேச வேண்டியுள்ளது. சில 'பேட்ச் காட்சிகளுக்கும்' ரஞ்சிதா வரவேண்டியுள்ளதாம்.
ஆனால் அதற்குள் நித்யானந்தனுடன் அவர் புரிந்த செக்ஸ் லீலைகள், அதன் பின்னணிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளார். எனவே அவருக்குப் பதில் புதிய நடிகையை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்தபோது, ரஞ்சிதாவே தொடர்பு கொண்டு தனது காட்சிகளை நீக்க வேண்டாம். எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டுக் கொண்டாராம்.
ஆனால் சொன்னபடி வரவில்லையாம். இப்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால், ரஞ்சிதாவின் பாத்திரத்துக்கு புதிதாக வேறு ஒரு நடிகையை வைத்து காட்சிகளை எடுக்கத் தீர்மானித்துள்ளார் மணிரத்னம். ரஞ்சிதா படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதையும் பத்திரிகைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ராவண் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











