'டைட்டில்' ஆன எம்.ஜிஆர். கார் நம்பர்!

இந்தியில் வெளியான சூப்பர் ஹிட் படமான டாக்ஸி நம்பர் 9211 படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கிறது ஜிவி பிலிம்ஸ். ஆங்கிலத்தில் நானா படேகர், ஜான் ஆப்ரகாம். சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
தமிழில் பசுபதி, நானா வேடத்தில் நடிக்கவுள்ளார். அஞ்சாதே புகழ் அஜ்மல் ஜான், ஆப்ரகாம் வேடத்தில் நடிக்கிறார். படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடைய கார் எண் 4777 ஆகும். அக்காலத்தில் ரொம்ப பேமஸான எண்ணும் கூட. இப்போது இதையே படத்திற்குத் தலைப்பாக வைத்து விட்டனர்.
எம்.ஜி.ஆர் கார் பெயர் வைத்தால் மட்டும் போதாது, படமும் எம்.ஜி.ஆர். அளவுக்கு 'வெயிட்'டாக இருக்கட்டும்.


Click it and Unblock the Notifications











