குப்பை பொறுக்குவோரை மையப்படுத்தி 'ஒரே மனசு'!

By Staff

Gajan with Anumitha
நீண்ட நாட்களுக்கு முன் போராசிரியர் ஏஎஸ் பிரகாசம் எச்சில் இரவுகள் எனும் பெயரில் ஒரு படம் எடுத்தார். பிச்சைக்காரர்கள்தான் இந்தப் படத்தின் மையக் கரு. இப்போது குப்பைப் பொறுக்குபவர்களை மையமாக வைத்து ஒரே மனசு எனும் பெயரில் படம் எடுக்கிறார் விஷ்ணுஜி எனும் புதியவர்.

எம்.எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. படத்தின் கதையோட்டத்திற்கு குப்பை பொறுக்குபவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பதால், நிஜ குப்பை பொறுக்குபவர்கள் சிலரை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் விஷ்ணுஜி.

பணம்தான் முக்கியம் என்று நினைக்கும் அப்பாவுக்கும், சொந்தம்தான் முக்கியம் என்று நினைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் காமெடிப் போராட்டம்தான் கதை.

தான் காதலிக்கும் தாய்மாமன் பெண்ணை திருமணம் செய்ய விடாமல், பணத்திற்காகத் தடுக்கிறார் அப்பா. ரோட்டில் குப்பை பொறுக்கித் திரியும் சிலரைப் பிடித்து அவர்களை சிங்கப்பூர் செல்வந்தர்கள்போல வேடம் மாற்றி ஒரு கவர்ச்சியான பெண்ணுடன் மாப்பிள்ளை பார்க்க வந்த கும்பலாக வீட்டில் தங்க வைக்கிறான் மகன். இவர்கள் செய்யும் அட்டூழியத்தில் அப்பா மனம் மாறுகிறாரா? தாய்மாமன் மகளை கதாநாயகன் கைப்பிடிக்கிறானா என்பதே 'ஒரே மனசு'.

வாழ்க்கையிலும் சரி, காதலிலும் சரி இரண்டு மனசு இருக்கக் கூடாது. ஒரே மனசு இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்பது இந்தப் படத்தில் இயக்குநர் சொல்ல வரும் தத்துவம்.

குப்பை பொறுக்குபவர்களாக கிரேன் மனோகர், காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். சென்னை மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சாலை ஓரங்கள் ஆகிய இடங்களிலேயே படத்தின் பெரும் பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

புதுமுகம் கஜன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆந்திரா மாடல் அனுமிதா நடிக்கிறார். ரிஷா, கேரளப புதுமுகம் கோனிகா, சேதுவிநாயகம், கிரேன் மனோகர், காதல் சரவணன் ஆகியோருடன் புதுமுகங்களும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஷ்ணுஜி இயக்குகிறார்.

'மகளிர்க்காக', 'ஆவணித் திங்கள்' படங்களுக்கு இசையமைத்த ஆர்.ஷங்கர் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X