அஜீத்துடன் கலக்க வரும் பியா

பில்லாவை முடித்த கையோடு அஜீத் நடிக்க வந்துள்ள படம் ஏகன். ராஜு சுந்தரம் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் அஜீத்துக்கு இரு ஜோடிகள். ஒருவர் நயனதாரா. இன்னொருவர் பியா. கதைப்படி பியாவுக்குத்தான வெயிட்டான ரோலாம். இதை சொல்லித்தான் நயனதாராவிடம் ஒப்புதல் பெற்றுள்ளனர்.
கவர்ச்சியில் சிறப்பாக இருக்கும் பியா நடிப்பிலும் ஓஹோவென அசத்திக் கொண்டிருக்கிறாராம். ராஜு சுந்தரம், அஜீத் ஆகியோரிடம் நடிப்புக்காக பாராட்டுக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறாராம்.
நயனதாராவுக்கு சரியான போட்டியாக கலக்கிக் கொண்டிருக்கும் பியா, தமிழ் நாயகிகளுக்கும் சரியான சவாலாக இருப்பார் என ஏகன் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
திரிஷாவின் வேகத்திற்கு நயனாரா ஸ்பீட் பிரேக்கராக வந்து சேர்ந்தார். இப்போது நயனதாராவின் வேகத்திற்கு பியாதான் பிரேக்கரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments


Click it and Unblock the Notifications