நரேன் - பூஜா - ரம்யா!

By Staff

Narain with Pooja
அஞ்சாதே படத்துக்குப் பின்னர் நரேன் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். பூஜா மற்றும் மலையாளத்து ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்குப் பெயர் பந்தயக் கோழி.

புதுமுகம் வேணு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் கதை வித்தியாசமானது. ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் படம். இப்படிப்பட்ட கதைகள் நிறைய வந்து விட்டதால் இக்கதையை சற்றே வித்தியாசமாக்கியிருக்கிறாராம் வேணு.

தாயின் லட்சியத்தை அடைய எப்படி மகன் போராடுகிறார், கடைசியில் எப்படி அதை சாதிக்கிறார் என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறாராம் வேணு.

சென்டிமென்ட் கலவை கலந்துள்ள இப்படத்தில் பூஜாவுக்கும், ரம்யா நம்பீசனுக்கும் நல்ல கேரக்டர்களாம். கதைப்படி பூஜாதான் நாயகி. இருப்பினும் ரம்யாவின் கேரக்டரும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளதாம்.

சென்னை மற்றும் பொள்ளாச்சியில் வைத்து படப்பிடிப்பை முடித்துள்ள வேணு, செப்டம்பருக்கு பந்தயக்கோழி திரைக்கு வரும் என்கிறார்.

ரம்யாவுக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். ஏற்கனவே சேரனுடன் இணைந்து ராமன் தேடிய சீதையில் நடித்துள்ளார் ரம்யா. அப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்த படமும் ரெடியாகியிருப்பது ரம்யாவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X