இமயமலையில் பாபா குகையில் ரஜினி!

By Sudha

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக எந்திரன் படத்தில் மிகவும் பிஸியாக இருந்தார் ரஜினி. இதனால் அவர் வருடந்தோறும் மேற்கொள்ளும் இமயமலைப் பயணத்தையும் தள்ளிப் போட்டார்.

இப்போது எந்திரன் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. வசூலில் புதிய சாதனைப் படைத்துள்ளது.

உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில், தனது நெருங்கிய நண்பர்கள் இருவர் துணையுடன் பாபாவின் குகைக்குச் சென்றார்.

மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் இந்த இடத்தில் அவர் தியானம் செய்தார்.

பின்னர் அவர் பாபாவின் ஆசிரமத்தில் தங்கினார். தீபாவளிக்கு முன் சென்னை திரும்பும் ரஜினி, ரசிகர்களைச் சந்திக்கிறார். மகள் திருமணம் மற்றும் எந்திரன் வெற்றிக்காக சிறப்பு விருந்தளிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X