பிறரை குறை சொல்லாமல் படம் எடுங்கள்-ராமநாராயணன்

சென்னை சத்யம் வளாகத்தில் நேற்று நடந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராமநாராயணன் இதனைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற பலரும் சினிமா ஓடவில்லை என்று புலம்பினர்.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறுகையில், "நாங்கள் தியேட்டர் நடத்துவதா இல்லையா என்றே தெரியவில்லை. ஐபிஎல் போட்டியால் கூட்டமே இல்லை" என்றார்.
வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது, "இன்றைய சினிமா பல சோதனைகளை எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் தயாரிப்பாளர்கள்-டைரக்டர்கள் மாறிக்கொள்ள வேண்டும். இவ்வளவுதான் பங்கு தொகை வரும் என்பதை தெரிந்துகொண்ட பிறகும், அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பது தவறு. மிக குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரித்தால்தான் தயாரிப்பாளர்களும் வாழ்வார்கள். திரையுலகமும் வாழும்,'' என்றார்.
பின்னர் பேசிய ராம நாராயணன், "சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதற்கு நாமே ஒரு காரணத்தை கற்பிக்காமல், நம்மிடம் உள்ள தவறுகள் என்ன என்று தெரிந்துகொண்டு, அதை திருத்திக்கொள்ள வேண்டும்.
மற்ற விஷயங்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, தரமான படங்களை தயாரிக்க வேண்டும். இதில் தயாரிப்பாளர்-டைரக்டர் இரண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கிறது. தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்...'' என்றார்.


Click it and Unblock the Notifications











