ராம நாராயணனிடம் சாமி சரண்!

மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி பத்மப்ரியாவை கன்னத்தில் பளார் என அடித்தார் சாமி என்பது குற்றச்சாட்டு. இதுதொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சிலில் பத்மப்ரியா புகார் கொடுக்க, அதை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதித்தது.
இதனால் ஒரு வருடத்திற்குப் புதுப் படத்தை இயக்க முடியாத நிலைமை சாமிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சாமியைத் தேடி ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் புதுப் பட வாய்ப்பு வந்தது. ஆனால் சாமிக்கோ படத்தை இயக்க முடியாத நிலை.
இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உதவுமாறு கோரி ராம.நாராயணனை அணுகியுள்ளாராம் சாமி.
இதுகுறித்து சாமி கூறுகையில், தன்னால் முடிந்தவரை முயற்சி செய்வதாக கூறியுள்ளார் ராம.நாராயணன். இருப்பினும் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களிடமும் பேசி விட்டுத்தான் எதையும் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார் என்றார் சாமி.
சாமியைத் தேடி வந்துள்ள புதிய படத்தில் ராஜ்கிரணோடு, மிருகம் படத்தின் நாயகன் ஆதியும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்டையும் ரெடி செய்து விட்டார் சாமி. இப்படத்துக்கான தயாரிப்பாளரும் கூட ரெடியாம். இது பட்ஜெட் படமாம்.
'நாராயணனை' நம்பினோர் கைவிடப்படார், சாமிக்கும் 'அருள்' கிடைக்கட்டும்!


Click it and Unblock the Notifications











