வருகிறது சக்கரக்கட்டி!

By Staff

Sakkarakatti movie still
பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக அறிமுகமாகும் சக்கரக்கட்டி படம் செப்டம்பர் மாதம் உலகெங்கும் திரைக்கு வருகிறது.

பாக்யராஜின் மகன் சாந்தனு. குட்டிப் பையனாக இருந்தபோது வேட்டிய மடிச்சுக் கட்டு படத்தில் நடிப்பில் சுட்டித்தனத்தைக் காட்டியிருந்தார். இப்போது வாலிப காளையாக மாறியுள்ள சாந்தனு, ஹீரோவாக அவதாரம் பூண்டுள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபுவின் அறிமுகப் படமான சக்கரக்கட்டி மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் சாந்தனு.

முதல் படம் என்பதாலும், சாந்தனுவை டாப் கியரில் தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் கடுமையாக உழைத்து படத்தை பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார் கலாபிரபு.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் ஆகி பட்டி தொட்டியைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக டாக்ஸி டாக்ஸி பாடல் சூப்பர் ஹிட் ஆகி விட்டது. இதன் காரணமாக இப்பாடலை மறுபடியும் ரிச்சாக ஷூட் செய்துள்ளார் கலாபிரபு.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக வேதிகா கலக்கியுள்ளார்.

படம் பக்காவாக தயாராகி விட்டபோதிலும் இடையில் பல முக்கிய படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி வந்ததால், சக்கரக்கட்டியை மெதுவாக இறக்கி விட தீர்மானித்தார் கலைப்புலி தாணு. இந்த நிலையில் செப்டம்பர் 26ம் தேதி சக்கரக்கட்டி உலகெங்கும் திரைக்கு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X