போராளி... ஈழத்துப் பின்னணியில் சசிகுமார் நடிக்கும் படம்!

சுப்பிரமணியபுரம் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்தவர் சசிகுமார். பின்னர் நாடோடிகள் படத்திலும் நடித்து வெற்றி பெற்றார்.
அடுத்து சசிகுமாரும் சமுத்திரக்கனியும் கைகோர்த்துள்ள படம் போராளி. ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை, விடுதலைப் புலிகள் போராட்டம் போன்றவை இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்துக்கு நாயகி தேர்வு நடக்கிறது.
முதலில் அஞ்சலியை நாயகியாக முடிவு செய்தனர். ஆனால் நாயகி கேரக்டருக்கு த்ரிஷா பொருத்தமாக இருப்பார் என சமுத்திரக்கனி விரும்பியதால், இப்போது அவரிடம் பேச முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி த்ரிஷாவிடம் கேட்டபோது, 'போராளி படத்தில் நடிக்க சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை', என்றார்.
த்ரிஷா தற்போது இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான தீன் மார் தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே த்ரிஷா இந்தப் படத்தில் நடிப்பது படத்தை தெலுங்கிலும் பெரிய வரவேற்பைத் தரும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது.


Click it and Unblock the Notifications











