சுராஜூடனும் லடாய் - வடிவேலு சாதனை!

நம்ம வைகைப் புயல் வடிவேலுவையே எடுத்துக்கொள்ளுங்கள். கவுண்டமணிக்குப் பிறகு தனிப் பெரும் காமெடியன் என்ற அந்தஸ்தை அரும்பாடுபட்டுப் பெற்றார். இன்று அவரது முகம் திரையில் தெரிந்தாலே அரங்கம் சிரிப்பலையில் அதிர்கிறது.
இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகும்கூட, அவரை நாயகனாக நடிக்க வைக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
அப்படிக் காத்திருந்த பெரும்புள்ளிகளில் ஒருவர் அபிராமி ராமநாதன். பஞ்சாமிர்தம் படத்தைத் துவங்கும் வடிவேலுவுக்காக ஒரு நகைச்சுவைக் கதையைத் தயார் செய்து, இயக்குநரை விட்டு அவருக்கு கதையும் சொல்ல வைத்தார். ஆனால் வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். காரணம் வடிவேலு சொன்ன மாற்றங்களைச் செய்ய இயக்குநர் மறுத்துவிட்டதுதான்.
இப்படி வடிவேலு கழற்றிவிட்ட படங்கள் நிறைய... இது கூடப் பரவாயில்லை. ஆனால் வடிவேலு தன் பிடிவாதத்தால் நடிக்க ஒப்புக் கொண்டு பாதியில் கழன்று கொண்ட படங்கள் அவர் நடித்துள்ள படங்களின் பட்டியலுக்குச் சம்மானது.
இரண்டு படத்தில் இயக்குநர் சுந்தர் சி சொன்னதுபோல் நடிக்காமல் தன்னிஷ்டப்படி நடித்ததால் அவருடைய நட்பையும் இழக்க வேண்டிய வந்த்து. இனி சுந்தர் படங்களில் நடிக்கவே மாட்டேன் என வைராக்கியத்துடன் இருக்கிறார் வைகைப் புயல்.
சுந்தரின் சீடரான சுராஜூடனும் இப்போது வடிவேலுவுக்குப் பிரச்சினை.
தனுஷ்- தமன்னா நடிக்கும் படிக்காதவன் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில், ஒரு காட்சியில் இயக்குநர் சொன்னதை தன் இஷ்டப்படி நடித்துள்ளார் வடிவேலு. இயக்குநர் மூன்று முறை சொல்லியும் கேட்காமல் தன் விருப்பப்படியே நடித்துள்ளார்.
நான்காவது முறை இயக்குநர் அதைச் சுட்டிக் காட்டியபோது, கோபித்துக் கொண்டு செட்டை விட்டே போய்விட்டார் வடிவேலு.
நடந்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த படத்தின் ஹீரோ தனுஷ், விடுங்க... நாளைக்குப் பாத்துக்கலாம், என்று கூறிவிட்டாராம்.
ஆனால் இயக்குநருக்கு அடுத்த நாளே அதிர்ச்சி காத்திருந்தது. வாங்கின அட்வான்ஸை பைசா பாக்கியில்லாமல் கொடுத்தனுப்பிவிட்டாராம் வடிவேலு.
நஷ்டம் யாருக்கு? நல்ல நகைச்சுவைக்குக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு!


Click it and Unblock the Notifications











