வேலு பிரபாகரனின் இன்னொரு காதல் கதை!

காதல் கதை என்ற பெயரில் வேலு பிரபாகரன் எடுத்த படம் பெரும் சிக்கலுக்குப் பின் சமீபத்தில் ரிலீஸாகியது. குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு எடுத்திருந்தார் வேலு பிரபாகரன்.
இந்த நிலையில் தற்போது அடுத்து படத்திற்குத் தயாராகி விட்டார். படத்துக்கு முகமூடிக் கூத்து என பெயரிட்டுள்ளார். இப்படத்தையும் காதல் கதையை இயக்கிய வேலு ராஜாதான் இயக்கப் போகிறார். கதை, திரைக்கதை, வசனம் மட்டும் வேலு பிரபாகரன்.
முற்றிலும் புதுமுகங்களைப் போட்டு இப்படம் எடுக்கப்படுகிறது. கதை என்ன என்று கேட்டால், கதை, கவிதை, சினிமா, டிவி ஆகியவற்றில் காதலை ரசிக்கும் மக்கள், குடும்பத்திலோ, உறவினர் வீடுகளிலோ அது நடந்து விட்டால் எப்படி முகம் சுளிக்கிறார்கள். அதைத்தான் எனது முகமூடிக் கூத்து படத்தில் காட்டப் போகிறேன் என்கிறார் வேலு பிரபாகரன்.
வரட்டும், பார்க்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications