ஐபிஎல் அம்பாசடர்கள் விஜய், நயன்!

மிகப் பெரும் தொகை கொடுத்து இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளதாம் சென்னை அணியின் ஓனரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்.
ஏவிஎம்மின் அடுத்த படத்தில் விஜய்யும், நயனதாராவும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் சென்னை அணியின் பிராண்ட் அம்பாசடர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அணி ஐபிஎல் லீக் 20-20 போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பை, கொல்கத்தா, மொஹாலி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் போது விஜய்யும், நயனதாராவும் அங்கு சென்று சென்னை அணியினரை உற்சாகப்படுத்துவார்கள்.
இரு பெரும் நடிகர்களையும் பிராண்ட் அம்பாசடர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருவதாக இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவரும், தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளருமான சீனிவாசன்.
விஜய்யும், நயனதாராவும், ஒரு கிரிக்கெட் அணியின் அம்பாசடர்களாக ஒப்பந்தமாகியிருப்பது இதுவே முதல் முறை. அதிலும் நயனதாரா சினிமா சம்பந்தப்படாத ஒரு விளம்பரத்திற்கு ஒப்பந்தமாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications











