21ம் தேதி விக்ராந்த்-மானசா திருமணம்

ஆர்.வி. உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். இதையடுத்து நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இப்போது கோரிப்பாளையம் உள்பட இரு படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் நடிகை மானசாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மானஸாவின் தந்தை ஹேமசந்தர் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார்.
இந்தத் திருமணம் சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் 21ம் தேதி காலை நடக்கிறது. திருமண வரவேற்பு 20ம் தேதி மாலை நடக்கிறது.
விக்ராந்தின் தாயார் ஷீலா இரண்டு படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications