twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லவ் ப்ரொபோசலுக்கு புது இலக்கணம் வகுத்து 18 வருசமாச்சு.. #18YearsOfAlaipayuthey

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    18 வருடமாகியும் கொண்டாடத் திகட்டாத அலைபாயுதே!

    சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா, அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் 2000-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'அலைபாயுதே'.

    மணிரத்னம் படத்துக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதில் இந்தப் படத்திற்கு பெரும் பங்கு உண்டு. மணிரத்னம் பட பாணியிலான காதல் என வகையே உருவானது இந்தப் படத்தால் தான்.

    ரஹ்மான் இசை, மணிரத்னம் டச், கார்த்திக் - சக்தியின் மென்மையான காதல் என பல அழகியல் தந்த 'அலைபாயுதே' வெளிவந்து 18 வருடங்கள் ஆவதையொட்டி ஒரு நினைவுப் பகிர்வு.

    மணிரத்னம் டச்

    மணிரத்னம் டச்

    'அலைபாயுதே' மணிரத்னம் டச்சுக்கு உயிர்கொடுத்த படம் என்றே சொல்லலாம். கண்களால் காதல் மொழி பேசிய மாதவன் - ஷாலினி ஜோடி பல இளைஞர்களுக்கும் அன்றைய ஆதர்ச பிரியமானார்கள். தங்களை ஷாலினிகளாகவே நினைத்துக்கொண்டு கண்களால் காதலுக்கு தூது விடுத்த இளம்பெண்களும் ஏராளம். அலைபாயுதே - காதலின் அழகியல்.

    காதல் ப்ரொபோசல்

    காதல் ப்ரொபோசல்

    "நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசப்படல, நீ அழகா இருக்கேன்னு நான் நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு'' - இந்த லவ் ப்ரொபோசல் தான் பலருக்கும் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது. இதைத் தாண்டி ஒரு பெண்ணிடம் விருப்பத்தைத் தெரிவிப்பது தான் பெரும்பாலான ஆண்களின் கனவு.

    யதார்த்த படம்

    யதார்த்த படம்

    காதல் வெளிப்படுத்தலில் மணிரத்னத்தின் மேஜிக் இருந்தாலும், யதார்த்த வாழ்வியலைக் காட்சிப்படுத்திய படம் இது என அடித்துச் சொல்லலாம். கதாநாயகி காதலைத் தவிர்க்க நினைப்பதற்கான காரணங்கள், குற்றவுணர்வு கொள்வது என பெரும்பாலான பெண்களின் உண்மையான மனநிலையை இந்தப் படம் ஷாலினி வழியாகக் காட்சிப் படுத்தியது.

    மாதவன் - ஷாலினி

    மாதவன் - ஷாலினி

    கார்த்திக் - சக்தியாக வாழ்ந்த மாதவனும் ஷாலினியும் இணக்கமான காதலர்களாக அதே உணர்வை பார்ப்பவர்களுக்கும் ஊட்டிய பல காட்சிகள் இப்படத்தில் இருந்தன. ஃபீலிங்கோடு சக்தியின் முகம் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும் கார்த்திக்கிடம், "பொண்டாட்டி போய்ட்டா ஜாலியா இருக்கலாம்னு பார்த்தியா..?" எனச் சொல்லும் சக்தி அந்தக் கணத்தில் பெருக்குவது காதலின் ஆத்மார்த்தமான கண்ணீரை.

    ரஹ்மானிசம்

    ரஹ்மானிசம்

    மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'ரோஜா' தொடங்கி பல படங்கள் வெளிவந்திருந்தாலும் அவற்றில் முக்கிய இடத்தில் 'அலைபாயுதே' என்றைக்கும் இருக்கும். இப்போது 'காற்று வெளியிடை' படத்துக்காக தேசிய விருதைப் பெற்றிருக்கும் ரஹ்மான், மணிரத்னத்தைக் கொண்டாடுவதற்கான காரணங்களுள் ஒன்று இந்த 'அலைபாயுதே'.

    காதல் - அடையாளம்

    காதல் - அடையாளம்

    இன்றும் பல வகையான காதல் கதைகள் படமாகிக் கொன்டிருக்கின்றன. காதலையும், தமிழ் சினிமாவையும் தவிர்க்கவே முடியாது தான். ஆனால், அந்தக் காதல் கதைகளுக்கெல்லாம் பெஞ்ச் மார்க்காக எப்போதும் இந்த 'அலைபாயுதே' இருக்கும். ஜென் Z உலகிலும் காதல் என்கிற இதயப்பூர்வமான உணர்வு மாறாததுதானே.. அதுவரை 'அலைபாயுதே' காதல் நினைவில் கொள்ளப்படும்!

    English summary
    18 years since this beautiful movie 'Alaipayuthey' released. #18YearsOfAlaipayuthey
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X