தமிழ் 'ரெயின்போ' கன்னடத்தில் 'கில்லி'!

செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் உருவான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவிகிருஷ்ணாவுக்கும் இந்தப் படம் மூலம் பிரேக் கிடைத்தது.
தற்போது இந்தப் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளனர். கில்லி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோவாக குருராஜ் ஜக்கேஷ் நடித்துள்ளார். முக்கிய காமெடியனாக எத்திராஜ் ஜக்கேஷ் நடித்துள்ளார்.
இந்த இருவருமே அண்ணன் தம்பிகள். கன்னட நடிகர் ஜக்கேஷின் புத்திரர்கள். நாயகியாக நடித்திருப்பவர் சண்டிகரைச் சேர்ந்த அழகுப் பெண் ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். சோனியா அகர்வாலும் சண்டிகர்தான் என்பது பொருத்தமான விஷயம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையே இந்தப் படத்துக்கும். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தியேட்டர்களுக்கு வருகிறதாம் கில்லி.
Comments


Click it and Unblock the Notifications