மீண்டும் தயாரிக்கும் 'அபிராமி' ராமநாதன்
தியேட்டர் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் அபிராமி ராமநாதன் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார்.
1978-முதல் அபிராமி திரையரங்க வளாகத்தை நடத்தி வரும் ராமநாதன் தேயிலை, ரப்பர் எஸ்டேட்டுகள், டெக்ஸ்டைல் மில்ஸ் என பல தொழில்களுக்கு அதிபர்.
மணிகண்டன் பிலிம்ஸ் எனும் பெயரில் ரஜினியின் ராஜாதி ராஜா தொடங்கி லேட்டஸ்ட் சிவாஜி வரை 50க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளார். ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான பிளட்ஸ்டோனைத் தயாரித்தவர். ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் அடிமைச் சங்கிலி எனும் பிரமாண்ட படத்தைத் தயாரித்த ராமநாதன், அதன்பிறகு படத் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.
இப்போது மீண்டும் புதிய படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைப்பார் எனத் தெரிகிறது.
படத்தின் நாயகன், நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களை முடிவு செய்துவிட்ட ராமநாதன், இன்னும் சில தினங்களில் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளிடவுள்ளார்.
அபிராமி வளாகத்தில் நீங்கள் செய்த புதுமைகள் உங்கள் படத்திலும் தொடரட்டும்!


Click it and Unblock the Notifications











