புற்றுநோயால் பாதித்தவர்களை மகிழ்விக்க ஆடிய ஐஸ்வர்யா ராய்

மும்பையில் உள்ள புற்றுநோயாளிகள் உதவிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப் பாடினார் ஐஸ்வர்யா. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்தார் ஐஸ்வர்யா.
பின்னர் தனது படங்களிலிருந்து ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு ஐஸ்வர்யா டான்ஸ் ஆடினார். அவருடன் புற்றுநோயாளிகளும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் அக்ஷ்ய் குமார், எனது தந்தைக்கு புற்றுநோய் இருந்தது. எனவே அதன் வலி எனக்குத் தெரியும் என்றார்.
Comments
actor akshay kumar aishwarya dances for cancer patients aishwarya rai dance ஐஸ்வர்யா ராய் நடனம் நடிகர் அக்ஷ்ய் குமார் புற்றுநோயாளிகளுக்காக ஐஸ்வர்யா ராய் நடனம்


Click it and Unblock the Notifications