50 நாட்களைக் கடந்தது மங்காத்தா!

இன்றைக்கு 25 நாட்கள் ஓடினால் வெள்ளிவிழா, 50 நாட்கள் ஓடினால் பொன்விழா என்றாகிவிட்டது நிலைமை!
அஜீத்தின் மங்காத்தா படம் ஒரு வழியாக 50 நாட்களைத் தொட்டுவிட்டது. அஜீத்தின் பொன்விழாப் படம் இது.
படம் வெளியான ஒரு வாரத்துக்கு நல்ல கூட்டம். அதன் பிறகு படிப்படியாக கூட்டம் குறைந்துவிட்டது. இப்போது வார இறுதிகளில் பரவாயில்லை எனும் அளவுக்கு கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் காற்று வாங்குகின்றன அரங்குகள்.
ஆனால் வசூலைப் பொறுத்தவரை இந்தப் படம் இதுவரை ரூ 80 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தப் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில், இதுவே பெரிய வசூல்தான்.
படம் நிறைய திரையரங்குகளில் வெளியாகி, இப்போது 90 சதவீத அரங்குகளில் தூக்கப்பட்டுவிட்டது. மீதியுள்ளவற்றில் ஒரு சில தியேட்டர்களிலாவது படத்தை 100 நாட்கள் ஓட வைத்துவிடுவார்கள். காரணம் அஜீத்தின் 50 வது படம். 100 நாள் ஓடிய பெருமை வேண்டுமல்லவா!


Click it and Unblock the Notifications











