ரஜினிக்கு நன்றி-கருணாநிதியை சந்தித்த அஜீத் பேட்டி

சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் அஜீத், 'நடிகர்களை விழாக்களில் கலந்து கொள்ள சொல்லி மிரட்டுகிறார்கள்' என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார். நடிகர் அஜீத்தின் இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
காலில் விழுந்து ஆசி...
அஜீத்தின் பேச்சுக்கு அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் எதிர்ப்பும், ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பின. ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர் அஜீ்ததை தாறுமாறாக திட்டினார். தனது பேச்சு அரசியலாக்கப்படுவதை உணர்ந்த அஜீத், சமீபத்தில் நடந்த சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்ததின் போது முதல்வரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று திடீரென்று வந்தார். கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்திய அஜீத், அவர் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட 30 நிமிடம் முதல்வர் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார். அஜீத் வந்திருக்கும் செய்தி பரவியதும் மளமளவென்று நிருபர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
முதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?
இது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.
முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே?
இதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா?
அப்படியெல்லாம் கிடையாது.
நீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?
நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...


Click it and Unblock the Notifications











