நோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான்!!

ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவரைக் கவுரவிக்க, மாபெரும் இசை நிகழ்ச்சி நடப்பது வழக்கம். சீனாவின் ஜனநாயக தலைவர் லீ ஜியாபோ (Liu Xiaobo) இந்த ஆண்டு அமைதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கவுரவிக்கும் விதத்தில், இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 11-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அரங்கில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியை பிரபல நடிகர் டென்ஸல் வாஷிங்டன் தொகுத்து வழங்குகிறார்.
9 இசை வல்லுநர்கள் பங்கேற்கும் இந்த கவுரவத்துக்குரிய நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகன், நம்ம ஊர் ஏ ஆர் ரஹ்மானும் பங்கேற்கிறார். பேரி மணிலோ, எல்விஸ் காஸ்டெல்லோ, ஹர்பி ஹன்காக், ஜெமிரோக்வாய் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பங்களிப்பைத் தரவிருக்கிறார்கள்.
இந்திய அளவில் எந்த இசையமைப்பாளருக்கும் இதுவரை கிடைக்காத கவுரவம் இது.


Click it and Unblock the Notifications











