சாப்பிட வாங்க..ஷாருக்குக்கு ஆர்னால்ட் அழைப்பு

அழைப்பை விடுத்துள்ளவர் சாதாரணமானவர் இல்லை - கலிபோர்னியா மாகாண ஆளுநரும், முன்னாள் நடிகருமான ஆர்னால்ட் ஸ்வார்ஸனீகர்தான்.
செப்டம்பர் 20ம் தேதி தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் டின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஷாருக்கை அழைத்துள்ளார் ஆர்னால்ட். நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக் கான் விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரம் கடுப்படிக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து கொண்ட ஆர்னால்ட், ஷாருக்கை டின்னருக்கு அழைத்துள்ளார்.
இருப்பினும் இதை ஏற்பதா, இல்லையா என்பதை இன்னும் ஷாருக் முடிவு செய்யவில்லையாம்.
இருந்தாலும் நியூயார்க் சம்பவத்திலிருந்து விடுபட்டு விட்டார் ஷாருக். இதை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது காண முடிந்தது.
அமெரிக்காவுக்கு பதிலடியாக ஏதாவது செய்யலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி செய்வதாக இருந்தால், ஏஞ்செலீனா ஜூலி, மேகான் பாக்ஸ் போன்றோர் இந்தியாவுக்கு வந்தால் அப்போது என்னை கூப்பிடுங்கள் என்று தனது ஸ்டைலில் நக்கலடித்தார் ஷாருக்.


Click it and Unblock the Notifications











