ஹீரோ-இயக்குனர் புறக்கணித்த 'அ...அ....அது!'

By Staff

Avan Aval Adhu movie still
பொதுவாக ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் யார் இருப்பார்களோ இல்லையோ... படத்தின் ஹீரோவும் இயக்குநரும், இசையமைப்பாளரும் கட்டாயம் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் யாருமே இடம்பெறாத ஒரு பாடல் வெளியீடு சமீபத்தில் நடந்தது. படத்தின் பெயர் அவன் அவள் அது.

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா எடுத்த ஒரு இந்திப் படத்தின் தழுவல் இது. மாதவன் நாயகனாகவும், சதா, ஷமிதா ஷெட்டி ஜோடியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்ட நிலையில், நாயகன் மாதவன் படத்திலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்து விட்டார்.

படத்தில் நடித்ததற்காக தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இன்னும் தயாரிப்பாளர் தரவில்லை என்றும், அதைக் கேட்டதற்காக படத்தை அரைகுறையாக முடித்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார் மாதவன்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு படத்தின் நாயகனான மாதவன் வரவில்லை. இயக்குநர் கோணா வெங்கட்டும் வரவில்லை.

படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், பட்நாயக் ஆகிய இருவரும் கூடவரவில்லை.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பி.வாசு மற்றும் சதா வந்திருந்து ஆடியோவை வெளியிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X