ஸ்டார் பங்குகளை வாங்கும் ஜிதேந்திரா!

ஸ்டார் குழுமத்தின் 25.99 சதவீத பங்குகளை கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆசியன் பிராட்காஸ்டிங் எப்.எஇசட்.எல்எல்சி (ஏபிஎஃப்)என்ற நிறுவனத்தின் மூலமாக வாங்கியது பாலாஜி டெலிபிலிம்ஸ். மேலும், கடந்த ஆண்டு ஸ்டார் குழுமத்துடன் பிராந்திய மொழிகளில் கூட்டு செயல்பாட்டுக்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டது.
தற்போது இவற்றை ரத்து செய்யும் பாலாஜி டெலிபிலிம்ஸ், அதற்குப் பதிலாக ஏபிஎஃப் நிறுவனம் உள்ள ஸ்டார் குழும பங்குகளை நேரடியாக விலைக்கு வாங்கவுள்ளது.
இதுகுறித்த முடிவுக்கு ஜிதேந்திர கபூர், ஷோபா கபூர், ஏக்தா கபூர், துஷார் கபூர் ஆகியோரை உள்ளடக்கிய பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவன போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, 240 நாட்களுக்குள் ஒரு பங்கு ரூ. 190 விலை என பாலாஜி டெபிலிம்ஸ் நிறுவனம் வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தப் பங்குகளை வேறு யாருக்கேனும் விற்க ஏபிஎஃப் நிறுவனத்திற்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் குழும பங்குகளை நேரடியாக வாங்குவதன் மூலம் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனம் மேலும் விரிவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனம் மெகா தொடர்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











