முதுகு தெரிய நடித்த காட்சியை கட் செய்த கரீனா கபூர்

சைப் அலிகானும், கரீனா கபூரும் இணைந்து நடித்துள்ள படம் குர்பான். கரன் ஜோஹர் தயாரித்துள்ளார். ரென்சில் டிசில்வா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சைபுடன் நெருக்கமான பல காட்சிகளில் வருகிறார் கரீனா.
இந்த நிலையில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்த கரீனா ஒரு காட்சியைப் பார்த்தபோது சங்கடமாகி விட்டாராம். அது அவராகவே விருப்பப்பட்டு நடித்த காட்சிதான். இருந்தாலும், இப்போது பார்த்தபோது படு செக்ஸியாக இருப்பதாக உணர்ந்தார். இதையடுத்து அந்தக் காட்சியை மட்டும் நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.
பின்புறம் ஆடை எதுவும் இல்லாமல் வெறும் முதுகுடன் நிற்பது போன்ற காட்சி அது.
இதுகுறித்து கரீனா கூறுகையில், நாங்கள் கலைஞர்கள், நடிக்க வந்த பிறகு ஆட்சேபிக்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட காட்சியை பெற்றோர்கள் பார்த்தால் எப்படி உணர்வார்கள். அதனால்தான் இக்காட்சியை எடுக்குமாறு கூறி விட்டேன்.
முத்தக் காட்சியில் எல்லாம் நான் நடித்துள்ளேன். அவை எல்லாம் செக்ஸியாகத் தெரியவில்லை. ஆனால் இது அப்படி எனக்குத் தோன்றவில்லை என்றார் கரீனா.
கரீனாவின் விருப்பத்திற்கேற்ப அந்தக் காட்சியை நீக்க ஜோஹரும், சில்வாவும் முடிவு செய்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











