மெகா டிவியில் எம்.எஸ்.வியின் மெல்லிசை அனுபவங்கள்

By Staff

Endrum MSV
மெகாடிவியில் ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு இசையால் வசமான நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ள நிகழ்ச்சி என்றும் எம்.எஸ்.வி.

இசைச்கென பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மெகாடிவி பிரபல இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை புதிதாக வடிவமைத்து ஒளிபரப்பி வருகிறது.

மெல்லிசையும், இனிமையும் சேர்ந்த இந்த நிகழ்ச்சி இசைப்பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இசைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து சரித்திர சாதனை படைத்தவர் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.

திரை இசைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு
இசையமைத்து மெல்லிசை மன்னர் எனப் பெயர் பெற்றவர்.

நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே மெல்லிசையுடன் பகிர்ந்து கொள்கிறார் என்றும் எம்.எஸ்.வி நிகழ்ச்சியில்.

மெகா டிவியில் வாரந்தோறும் ஞாயிறு காலை 10.00 மணிக்கும், சனி இரவு 8.00 மணிக்கும், இசையால் வசமான நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ள இந்த புதிய வித்தியாசமான நிகழ்ச்சியினை அழகிய தமிழில் அற்புதமாக தொகுத்து வழங்குகிறார் ஆதவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X