ரஜினிக்கு கவுண்டமணி 'நோ'!

தங்கம் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு பல படங்கள் தன்னைத் தேடி வந்தாலும், சிவ வாய்ப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒப்புக் கொண்டு வருகிறார் கவுண்டமணி. இப்போதைக்கு நான்கு புதுப்பட ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது நடித்து வரும் குசேலன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இயக்குநர் வாசுவிடமிருந்து அழைப்பு வந்ததாம் கவுண்டருக்கு.
கிராமத்தில் சலூன் கடை நடத்தும் பசுபதிக்கு போட்டியாக சலூன் நடத்தி கலாய்க்கும் வேடம் கவுண்டருக்கு அளிக்கப்பட்டதாம். ஆனால் இந்த வாய்ப்பை ஆரம்பத்திலேயே மறுத்து விட்டாராம் கவுண்டமணி.
வாசு மற்றும் ரஜினியின் முந்தைய படங்கள் பலவற்றில் கவுண்டமணி பெரும் பங்கு வகித்திருக்கிறார். மன்னன், உழைப்பாளி படங்களில் ரஜினியும் கவுண்டரும் அடித்த லூட்டி அத்தனை சுலபத்தில் மறக்க முடியாதது.
பாபாவில் கூட ரஜினிக்கு இணையாக படம் முழுக்க வந்து கலகலக்க வைத்தார் கவுண்டர். ஆனால் சந்திரமுகியில் வடிவேலுவுடன் ரஜினி நடித்ததால், சற்றே மன வருத்தத்தில் இருந்தாராம் கவுண்டமணி. இந்த நிலையில்தான் குசேலனை வேண்டாம் என்று கூறி விட்டார் என்று தெரிகிறது.
குசேலனில் நடிக்க கவுண்டர் மறுத்த பிறகுதான், விவேக்கை அணுகினர். அவரும் ஜகா வாங்கிக் கொள்ளவே, வடிவேலுவை கடைசியாக பிக்ஸ் பண்ணியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











