வீட்டை விட்டு ஓடிய ஹ்ரித்திக் ரோஷன் சகோதரி

ஹ்ரித்திக் ரோஷனின் மூத்த சகோதரி சுனைனா ரோஷன். ஹ்ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷனின் மூத்த மகள் இவர். இவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து கடந்த பத்து வருடங்களாக தந்தையின் வீட்டில்தான் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த ஆறு மாதங்களாக தான் காதலித்து வந்த மோகன் நகர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு அந்தேரி பகுதியில் உள்ள தனி வீட்டில் குடித்தனத்தை ஆரம்பித்துள்ளார்.
மோகனும், சுனைனாவும் காதலித்து வருவதாக சமீபத்தில்தான் செய்திகள் கசிந்தன. ஆனால் அதை சுனைனா மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணத்தை முடித்துக் கொண்டார்.
சுனைனாவின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ் ரோஷனும், ஹ்ரித்திக் ரோஷனும், அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டனராம்.
Comments


Click it and Unblock the Notifications