'மோகினி'யை 'சந்தித்த' இசைஞானி!

By Staff

Namitha and Alagiri in Jaganmohin pooja
பொதுவாக திரைப்படம் சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர் இசைஞானி இளையராஜா. தன் மகன்கள் இசையமைக்கும் படத்துக்கே கூட தலைகாட்ட மாட்டார்.

எந்தப் படத்தின் ஷூட்டிங்குக்கும் அவர் போனதுமில்லை.

அப்படிப்பட்ட ராஜா, இன்று ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்குக்கு, அதுவும் தான் இசையமைத்த பாடல் படமாக்கப்படுவதைக் காண மதுரை வந்தார்.

அந்தப் படம் நமீதா-நிலா நடிக்க என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜகன் மோகினி.

விட்டலாச்சார்யாவின் பழைய ஜகன் மோகினிதான் இப்போது இன்னும் கவர்ச்சி வண்ணம் பூசியபடி ரீமேக்காக வரவிருக்கிறது. படம் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்தப் படத்தில் என்.கே.விஸ்வநாதனும் இல்லை, ராஜாவும் இல்லை. பின்னர் தயாரிப்பை எச்.முரளி ஏற்றதும் படப்பிடிப்புக் குழுவே மாறிப்போனது.

தன் நீண்ட கால நண்பரும் தன் எல்லாப் படங்களும் ஆஸ்தான இசையமைப்பாளருமான இளையராஜாதான் இந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று இளையராஜாவிடம் போனாராம் என்.கே.வி.

சற்றே தயங்கி பின் தன் நண்பருக்காக ராஜா இப்படத்தை ஒப்புக் கொண்டாராம். அதே வேகத்தில் படத்துக்குத் தேவையான பாடல்களையும் போட்டுக் கொடுத்தாராம். அதில் ஒன்றுதான்,

பொன்மணித் தேரில்

என் நில ராஜா

வந்தானே திருநாளில்

அலைகடல் மேலே

இவன் படை சூழ

நின்றானே

இவன் போல...

-இந்தப் பாடலை உஜ்ஜயினி, ஸ்வேதா பாடியிருக்கிறார்கள். திருமலை நாயக்கர் மஹாலில் இப்பாடலுக்கு நிலாவும் ராஜாவும் 50 நடன மங்கைகள் புடை சூழ ஆடிப்பாடும் காட்சியை படமாக்கி வருகின்றனர்.

இந்தப் படத்துக்காக 4 பிரம்மாண்டமான செட் போட்டு அசத்தியிருக்கிறாராம் ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி.

அந்தமானில் விரைவில் ஒரு பிரமாண்ட கப்பல் செட் போடவுள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

இநதப் படத்தில் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் பெண்ணின் வேடம் நமீதாவுக்கு. அந்தக் காட்சியைப் படமாக்க, தண்ணீருக்கடியில் கேமராவை வைத்து படமாக்கும் உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறாராம் என்.கே.வி.

ராஜா என்ற புதுமுமுகம் நாயகனாக நடிக்கிறார். ஒரிஜினல் ஜகன்மோகினியில் நாயகனாக நடித்த நரசிம்மராஜூ முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

முன்னதாக மதுரையில் நடந்த ஜகன்மோகினி பட பூஜையில் மு.க.அழகிரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X