twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

    By Chakra
    |

    Pamela Anderson
    ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்ஸன் பங்கேற்றுள்ள கலர்ஸ் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மேல் ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனை எதிர்த்து கலர்ஸ் சேனல் வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஆபாசம் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் வகையில் உள்ள டிவி நிகழ்ச்சிகள் பற்றி மத்திய தகவல்ஒலிபரப்புத் துறை சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.

    இதில் சில நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு பார்க்கும் பிரைம் டைமில் ஒளிபரப்பக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இதில் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பாப் பாடகியும் நடிகையுமான பமீலா ஆண்டர்ஸன் இதில் பங்கேற்றுள்ளார்.

    நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றியதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

    மத்திய அரசு உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்க ஏற்கனவே ரூ.100 கோடி செலவிட்டு இருப்பதாகவும் முக்கிய நேரத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக சொல்லி விளம்பரங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும் நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றுவதை விளம்பரதார்கள் ஏற்க வில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பபட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றும் மத்திய அரசின் உத்தரவக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X